தேசிய வாசிப்பு மாதம் மற்றும்
சிறுவர் தினத்தை முன்னிட்டு நிகழ்வு

0
269

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையுடன் பொதுநூலகமும் இணைந்து நடாத்தும் கதை சொல்லும் நிகழ்வும் சிறுவர் படக்காட்சியும் நேற்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுநூலக உத்தியோகத்தர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் , சிறுவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் து .நகுலேஸ்வரன் , ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஆகியோர் கதைசொல்லும் வளவாளர்களாக கலந்துகொண்டதுடன் நிகழ்வில் ,சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதைகள் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது