Home முக்கிய செய்திகள் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது ! உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம், நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழு, கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி நிதிச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு நிதி செயலாளரின் அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு அறிவித்திருந்தாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், தேவையான நிதி, உரிய காலத்தில் வழங்கப்படும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் 2023க்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் திகதி நாட்டின் நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே தற்போதைய கடிதப்பரிமாறல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே 2023, மார்ச் 9 இல் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் நிதிப் பற்றாக்குறையால், ஏப்ரல் 25 மாற்றப்பட்டுள்ளது.