உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டப்படி மார்ச் 9 ஆம் திகதி நடத்துமாறும், மின் கட்டணத்தை குறைக்கக்கோரியும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி, மஸ்கெலியா நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபனால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஸ்கெலியா நகரில், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், உள்ளூராட்சிசபைத் தேர்தலில் புதிய லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.