தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்!

0
199

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அந்த அதிகாரிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், குறித்த அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் சுயாதீனமான முறையில் செயற்பட இடமளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.