தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் கடந்த இரு நாட்களில் மூன்று முறைப்பாடுகள் பதிவு!

0
39

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (27) மற்றும் நேற்று முன்தினம் (26) ஆகிய இரு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு குற்றவியல் முறைப்பாடும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாணந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹொரண காவல்துறை பகுதியில் உந்துருளியில் வந்த ஒரு நபர் பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

    குறித்த பகுதியில் வீடு வீடாகச் சென்று அரிசி, ஆடை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வழங்கும் செயற்பாடு தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

    மொனராகலை காவல்துறை பிரிவில் அலகியாவத்தை, மரகலவத்தை, குமாரவத்தை மற்றும் கிரிமண்டல மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து மொனராகலை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.

      குறிப்பிட்ட முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.