வலி வடக்கில் 30 வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்ட வள்ளுவர் புரத்தில் கருங்கல்லிலான திருவள்ளுவர் சிலை இன்றைய தினம் திறந்து வைப்பு,,
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J 247 தையிட்டி கிழக்கு வள்ளுவர் புரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள திருவள்ளுவர் சன சமூக நிலைய த்தினரால் இன்றைய தினம் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் வலி வடக்கு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் வசித்து வந்திருந்த நிலையில்
நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மேன்மை தங்கிய ரணில் விக்ரமசிங்க அவர்களின் காலப்பகுதியில் வலி வடக்கு பகுதியில் பொது மக்களின் இடங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு வேலை திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வலி வடக்கில் வீதி புனரமைப்பு, வீட்டுத்திட்டம் குடிநீர் வசதி மின்சாரம் மேலும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு அப்பகுதி மக்கள் தமது அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில்
வள்ளுவர் புரம் பகுதியில் காணப்பட்ட திருவள்ளுவர் சிலை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிடைந்திருந்தது
திருவள்ளுவர் கிராம மக்களின் முயற்சியின் பயனாக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில்
அழிக்கப்பட்ட சிலை இருந்த இடத்தில் கருங்கல்லினால் நிறுவப்பட்ட 4 அடி உயரமான புதிய திருவள்ளுவர் சிலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் வலி வடக்கு மீள் குடியேற்ற சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,