![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/தொழிற்சங்க-நடவடிக்கையால்-மலையக-மக்கள்-பாதிப்பு-1-1024x576.png)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/தொழிற்சங்க-நடவடிக்கையால்-மலையக-மக்கள்-பாதிப்பு-2-1024x576.png)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/தொழிற்சங்க-நடவடிக்கையால்-மலையக-மக்கள்-பாதிப்பு-3-1024x576.png)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மலையக பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தரவில்லை.
இருந்தபோதிலும் சில மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிச் சென்றுள்ளனர்.
இதேவளை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மலையக பகுதிகளில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனால் நோயாளர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அத்துடன் அரச வங்கிகள், தபால் நிலையங்கள், பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் ஆகியோரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.