‘அழகான இலங்கை சுத்தமான சுவாசத்திற்கான இடம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இ நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளைத்திட்டத்திற்கு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளது.இதன் முதற் கட்ட செயற்திட்டத்திற்காக 56 மில்லியன் ரூபாய் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. அதில் 33 மில்லியன் ரூபாய் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக சுமார் 200 வீதி சமிக்ஞைகள் நவீனமயமாக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.