நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு திறப்பு!

0
23

புலம்பெயர் உறவுகள் மற்றும் கலைஞர்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றக் கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தொடர்ந்து இசை விழா நடைபெற்றது.

இந்த இசை விழா நிகழ்வு நாளை மறுதினம் வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

முதலாம் நாள் நிகழ்வு மன்றத் தலைவரும் தமிழரசுக் கட்சியன் பதில் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றக் கட்டடம் இன்று காலை நாடாவெட்டித் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினாராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் சாயிமுரளியும், கௌரவ விருந்தினர்களாக சாதனைத் தமிழன் கலாநிதி ஆறுதிருமுருகன், ஈழத்தின் சிரேஷ்ட இசையமைப்பாளர் மு.கண்ணன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் ஈழத்தின் புகழ்பூத்த தவில் நாதஸ்வர வித்துவான்களின் மங்கல இசை, பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், புலம்பெயர் உறவுகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.