நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவியேற்பு!

0
78

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார்.
செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்தின் 1ஆம் நாள் அமர்வு இன்று காலை 9.30 இற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது. இதன்போது இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.