நாட்டின் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

0
145

இரசாயன உரங்கள் மீதான தடை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20 வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உற்பத்தியில் 16 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சந்தையில் போதியளவு உரம் காணப்பட்டாலும் விலை மிக அதிகமாகவே காணப்படுவதாக தோட்டக்காரர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

ஏனைய இடுபொருட்களின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.