நாட்டில் மத மற்றும் கலாசார மறுமலர்ச்சியை உருவாக்க தலதா உற்சவத்தைப் பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

0
16

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (02) கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதிஇதங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இழந்து வரும் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாசார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். எந்தவித தடைகளும் அல்லது இடையூறுகளும் இல்லாமல் தலதா ஆண்டகையை வழிபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும்இ இதற்காக அரசாங்கம் உச்ச பங்களிப்பையும் தலையீட்டையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

தலதா கண்காட்சி நடைபெறும் காலகட்டத்தில் கண்டி பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், மாணவர்களின் கல்விக்காக வேறு நாட்களில் பாடசாலைகளை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போதுஇ ​​தலதா மாளிகையை வழிபட வரும் பக்தர்களின் சுகாதார வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.