நிந்தவூரில் ”சிப்தொர” புலமைப்பரிசில்
வழங்கும் நிகழ்வு

0
169

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக பாதுகாப்பு நிதியத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி ”சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்திப் தலைமையில் இடம் பெற்றது.

சமுர்த்தித் தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட சமூர்த்திப்பணிப்பாளர் எம்.எஸ்.சப்ராஸ் கலந்து கொண்டார்.மற்றும் முகாமைத்துவப் பணிப்பா ளர் பி.சிவனேசன் பிரதேச கல்விமான்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் சமுர்த்திப் பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டதுடன் இம் முறை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.