நுவரெலியா பொகவந்தலாவ லொய்னோன் கெசல்சமுவ ஓயாவில், பெண் சிசுவின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரக்கரி தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த நபர் ஒருவரினால், சிசுவின் சடலம் மிதப்பது அவதானிக்கப்பட்டு, பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விசாரனைகளை ஆரம்பித்தனர்.
குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்ட தடைவியல் பொலிஸார், ஹட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கு அமைய, கெசல் கமுவ ஓயாவில் இருந்து சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட சிசு, ஏழு மாதங்களில் பிறந்துள்ளதாகவும், இனந்தெரியாத நபர்களினால், கெசல்கமுவ ஓயாவில் வீசப்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம், சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா
கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.