200 வருடங்கள் கடந்தும், இதுவரையில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்ட தொழிலாளர்கள், கறுப்பு பட்டி அணிந்து, இன்று, தமது எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களாகிய தமக்கு, ஆயிரம் ருபா சம்ளம் கூட இதுவரை கிடைக்கவில்லை என கவலை வெளியிட்ட தொழிலாளர்கள், வீடமைப்பு திட்டம், வீதி அபிவிருத்தி என, அனைத்திலும் தாம் பின்தாள்ளியுள்ளதாக தெரிவித்தனர்.
மலையக அரசியல்வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை மாத்திரம்
வழங்கிவிட்டு, வாக்குகளை மாத்திரம் பெற்று செல்லுகின்றனர் எனவும், ஆனால், தமது கோரிக்கைகளை மலையக அரசியல் வாதிகள் நிறைவேற்றுவதில்லை எனவும், பொகவந்தலாவ டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.