பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது

0
239

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன், மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆவது நினைவு நாள் நிகழ்வு, இன்று, வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
நினைவு தினம், வவுனியா நகர சபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகர சபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் நடத்தப்பட்டது.
இன்று காலை 8.15 மணிக்கு, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள, பண்டாரவன்னியனின் நினைவுத் தூபிக்கு, பண்டாரவன்னியன் சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் சார்பாக, மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், வவுனியா நகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வின் இறுதியில், தமிழ்மணி அகளங்கனால், நினைவுரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில், ஏனைய அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.