பண்ணையாளர்கள் மாடு வளர்ப்பை
கைவிடும் நிலை

0
141

ஒரு லீற்றர் தண்ணீரின் விலை 160 ஆனால் ஒரு லீற்றர் பாலின்விலை 110 ரூபாய் என மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கணேசபுரத்தில் இயங்குகின்ற பிள்ளையார் பாற் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாற்பண்ணையாரள்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்

‘எமது பண்ணையாளர்கள் கடந்த காலங்களில் 10 தொடக்கம் 20 லீற்றர் பால் கறக்கும் மாடுகளை வளர்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அனைத்து கால்நடை தீவினங்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் அதிக விலையேற்றம் காரணமாக மாடுகளை விற்பனை செய்து கொண்டு வருகின்றார்கள்’.

‘இதனால் எமது பகுதியில் பாலுற்பத்தி மிக வேகமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. எமது பண்ணையில் எமது பகுதியிலிருந்து நாளாந்தம், சுமார் 500 லீற்றல் பாலைச் சேகரித்து வந்தோம், தற்போதைய நிலையில் 200 இற்குக் குறைவான லீற்றர் பால்தான் ஒரு நாளைக்குச் சேகரிக்கப்படுகின்றன.’
‘தற்போது எமது பண்ணையாளர்கள் மாடு வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்வதா கைவிடுவதா என்ற நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்’.

‘கிராமிய பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாலுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கம் சொல்கின்றது. ஆனால் அதனை செயல் வடிவில் கொண்டு வருகின்றார்களில்லை.’ ‘எமக்கு அரசாங்கம் உதவ முன்வராவிட்டால் எமது பகுதியில் பாலுற்பத்தி இல்லாமல் போகும் நிலமை ஏற்படும். நாங்கள் எமது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடை வளர்ப்பைக் கைவிடும் பட்சத்தில் அரசாங்கம் எமக்கு மாற்று வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பின்னிற்கக் கூடாது’ எனவும் அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.