பதவி நீக்கம் தொடர்பான அறிவித்தல் கிடைத்துள்ளதாக ஜனக்க தெரிவிப்பு!

0
216

தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்து தமக்கு அறிவித்தல் கிடைத்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதில், நிதி, பொருளாதார உறுதிபடுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜனக்க ரத்னாயக்க, தம்மீதான குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.