பதுளை வைத்தியசாலையில் இதுவரை 50 கொவிட் மரணங்கள் பதிவு

0
251

பதுளை வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 50 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி மாதம் 1 மரணமும் மார்ச் மாதத்தில் 6 மரணங்களும் மே மாதத்தில் 36 மரணங்களும் பதிவாகியுள்ளன.

ஜூன் மாதத்தின் இதுவரையான நாட்களில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் ஒரு கொவிட் மரணம்கூட பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம் மே மாதத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை, பசறை, வெலிமடை, ஊவாபரணகம, மஹியங்கனை, ரிதிமாலியத்த, லுணுகலை, ஹாலிஎல, கந்தகெட்டிய, ஹல்துமுல்ல, சொரணத்தொட்ட, எல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.