பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகவே 75 வருடங்களாக நாடு முன்னோக்கி பயணிக்காதுள்ளது – சாகர காரியவசம்

0
85
  • பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகவே எமது நாடு 75 வருடங்களாக முன்னோக்கி பயணிக்க முடியாதுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

‘உலகிலுள்ள அநேகமான நாடுகளில் இந்த பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பலமானதாகக் காணப்படுகின்றன.

அமெரிக்கா போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன. இலங்கையில், உண்மையாக பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது அமுலில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

பயங்கரவாத நடவடிக்கைக்ள காரணமாகவே எமது நாடு 75 வருடங்களாக முன்னோக்கி பயணிக்க முடியாதுள்ளது என்றார்.