நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி காலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என்று, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு, 21 நாட்கள் தடையில்லா சுழற்சிமுறையிலான பயணக்கட்டுப்பாடு அவசியம் என்றும் சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.