கோட்டைக்கல்லாறு பொதுநூலகத்தில்
பரிசளிப்பு விழா நிகழ்வு

0
299

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொது நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா நூலகப்பொறுப்பாளர் வினோ ஒழுங்கமைப்பில் வாசகர் வட்டத்தலைவர் அ.புருஷோத்மன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக உபதவிசாளர் ரஞ்சினிகனகராசா, பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன், பிரதேச சபை செயலாளர் ச.அறிவழகன், சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.குகநேசன், அதிபர் க.செல்வராசா, மோட்டிவேசன் அண்ணாச்சி சமுக நல அமைப்பின் தலைவர் கா.சூசைதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து அதிதிகள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பிரதான வீதியூடாக பொதுநூலக விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

இங்கு அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற வாசிப்பு, பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மோட்டிவேன் அணணாச்சி சமுக நல அமைப்பின் தலைவர் சூசைதாசனால் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்கள்
பொதுநூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்ட்டன. மேலும் நீண்டகாலமாக
பொதுநூலகத்திற்கு வருகை தரும் வாசகர் ஒருவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டார்.