பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை மக்களின் போராட்டம்

0
173

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ‘சம்மாந்றை மக்களின் அழுகை குரல்’ எனும் தொனிப்பொருளில், துஆ பிராத்தனை
நேற்று அம்பாறை சம்மாந்துறையில் இடம்பெற்றது.
பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில், பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ஒன்று கூடிய பொது மக்கள், துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகள் பறப்பவிடப்பட்டுள்ளதோடு, சம்மாந்துறை மக்களின்
அழுகைக்குரல் எனும் ஆதரவு பதாதையும் தொங்கவிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.