பலாலி விமான நிலையம் ஆரம்பிக்க முடியும்
காங்கேசன்துறை துறைமுக பணி உடனடியாக சாத்தியம் இல்லை! அமைச்சர் நிமால் யாழில் தெரிவித்தார்.

0
212

பலாலி விமான நிலையப் பணிகளை ஆரம்பிக்க முடியும்
காங்கேசனதுறை துறைமுகம் ஊடான பணி உடனடியாக சாத்தியம் இல்லையென  அமைச்சர் நிமால் சிறிபாலடீசில்வா பலாலியில்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடான கப்பல் போக்கு வரத்து ஆகியவற்றை ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வுக் கலந்துரையாடல் நேற்று மாலை பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தினபோதே.
அமைச்சர் மேற்கண்டவாறு

தெரிவித்துள்ளார்.

துறைமுகம் அருகே அதற்கான வசதிகள் மேம்படுத்த வேண்டும். சில கட்டிடங்கள் அமைக்க வேண்டும்.அவை ஒப்பந்தங்கள் ஊடாகவே வழங்க முடியும் அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகசம் ஏற்படும் என்பதனால் உடனடியாக கப்பல் பணி ஆரம்பிக்கும் சாத்தியம் இல்லை. விரைவில் அதற்கான பணிகளை முன்டெடுக்கப்படும்.

இதேநேரம் பலாலி விமான நிலையத்தில் இருந்து அதன் பணிகளை 1ஆம் திகதி முதல் மேறகொள்ள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.