Home முக்கிய செய்திகள் பல்கலை மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி மோதல்

பல்கலை மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கி மோதல்

0
21

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்த மூன்று மாணவர்கள் இன்று பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் 4ம் வருடம் கல்வி கற்கும் 25 வயதுடைய கந்தளாய் அக்போபுர, கடுவெல வீதி, அதுருகிரி, பத்தேகம கொதடுவவத்த ஆகிய பகுதிகளில் வசிக்கும் 25 வயதுடைய மூன்று மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.