பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சல

0
107

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பில் பல்சமய ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி நிகழ்வும்
நீதி கோரிய போராட்டமும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி இடம்பெற்றது.
பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள் தலைமையிலும் செயலாளர் அருட்பணி க.ஜெகதாசின் ஒருங்கமைப்பிலும் உணர்வுபூர்மாக
அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறாமையினால் அவற்றினை வலியுறுத்தி நீதி கோரி அமைதியான முறையில் போராட்டமும்
முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது சாள்ஸ் மண்டபத்தின் வாசலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஆயர் இல்லத்தின் பிரதான நுழைவாயில் வரை சென்று பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 15 நிமிடங்கள் அமைதியான முறையில் இடம்பெற்றது.
பல்சமய ஒன்றியத்தினதும், கரித்தாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற நிகழ்வில் சமயத் தலைவர்கள், பல் சமய ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், மட்டக்களப்பு வாழ் இளைஞர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.