சாவச்சேரி கொடிகாமம் அச்சுவேலி பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்கள் குழந்தைகளின் தங்க நகைகளை வழிப்பறி செய்தமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றமை சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடுகளில் பொருட்களை திருடியமை தொடர்பில் நீண்ட நாள்களாக பொலிசாரால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்
யாழ்மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் 23 வயது 29 வயதுடைய மானிப்பாய் நாவற்குழியைச்சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்
வழிப்பறியில் கொள்ளையிட்ட மூன்று பவுணுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் வீடுகளில் களவாட்டப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களையும் மீட்டுள்ளனர் மேலும் விசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்