பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

0
11

தென்மேற்கு பாகிஸ்தானில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். 

தென்மேற்கு பாகிஸ்தான் – பலூசிஸ்தான் மாகாணத்தில் லாகூர் செல்லும் பேருந்து ஒன்றிலே துப்பாக்கிதாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

பேருந்தில் பயணித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டுவரும் ஆயுதக்குழுக்களில் ஒன்றான பலூச் விடுதலை இராணுவம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அனைவரும் இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளில் பணியாற்றியவர்கள் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.