இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலையை 290 ரூபாவாக குறைத்தாலும் ரொட்டி மற்றும் பாணின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர். என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பேக்கரி தொழிலுக்கான கோதுமை மா விநியோகத்தில் 50 வீதம் இரண்டு பிரதான மா நிறுவனங்களால் பெறப்படுவதாக குறிப்பிட்ட என்.கே.ஜயவர்தன இரண்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களும் தமது கோதுமை மாவின் விலையை குறைத்துள்ளன என தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் கோதுமைமாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால் மாத்திரமே பாண் மற்றும் ரொட்டிகளின் விலையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். நாட்டிலுள்ள இரண்டு மா நிறுவனங்களும் இன்னமும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 280 முதல் 310 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும், இரண்டு நிறுவனங்களும், இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையின் விலையை குறைத்துள்ள போதும் சந்தையில் மாவின் விலை இன்னும் கிலோவுக்கு 350 ரூபாவாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாண் – ரொட்டி விலை குறைக்கப்படுமா? வெளியான தகவல்
0
80
- Tags
- #bakery
Previous article
Next article