வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மன்னார் வீதியில் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே குறித்த ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற நாட்கள் தவிர்ந்த தினங்களில் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த அலுவலகத்தில் ஒழுங்கமைக்கப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம. ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.