பிரபல வர்த்தகரின் மகளை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் ஆளுநரின் மகன்!

0
115

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன், கொழும்பு ஹெவ்லொக் கார்டனிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து இளம்பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

நேற்று அதிகாலை குறித்த பெண் தாக்கப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இசாம் ஜமால்தீனுக்கு எதிராக பொலிஸார் பயணத்தடை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.