விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சுயநிர்ணய உரிமையை கோரினார். அதனையே நாமும் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதைப் போல, பிரபாகரன் கோரிய சுயநிர்ணய உரிமையினையே சுமந்திரன் கோருகின்றார். அதில் எந்த மாற்றம் இல்லை. சுயநிர்ணய உரிமை எங்களது மூச்சு என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகர, பிரபாகரன் கோரியதையே சுமந்திரன் கோருகிறார் என தெரிவித்தமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.