யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டவிரோதமாக மாட்டிறச்சியை கடத்திய இருவர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்துடன் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவுப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு, புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை காவலரண் ஊடாக சட்டவிரோதமான முறையில் நூறு கிலோ மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள், கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து மாட்டிறச்சி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டதுடன் மாட்டிறைச்சி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் ஊர்காவற்துறை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ் நகரை அண்மித்தவர்கள் எனவும் அவர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்பவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.