புதிய கடவுச்சீட்டுக்காக வெளிநாட்டிலுள்ள 26,000 இலங்கையர்கள் விண்ணப்பிப்பு!

0
10

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 26,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கை தூதரகங்கள் மூலம் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

சிலரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால், அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இம்மாத இறுதிக்குள் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுகின்ற போதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.