புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
331

கந்தளாய்-அரசமர சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் இருப்பதாக நினைத்து, புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வலய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட ஏனைய இருவர் வீட்டின் உரிமையாளர் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.