புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா திருப்பலி

0
274

புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா திருப்பலி மிக எளிமையான முறையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொவிட் 19 தொற்றின் காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுதலை தவிர்க்கும் வகையில் நாடாளாவிய ரீதியில் ஆலயங்களில் இடம்பெறுகின்ற அனைத்து வழிபாடுகளும் இடைநிறுத்துத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மிக எளிமையான முறையில் இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அந்தவகையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் அருட்தந்தை நவரெட்ணம் அடிகளாரினால் மிக எளிமையான முறையில் தனிமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனிதரின் திருச்சுவ ஆசிரும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .