புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் பயணிப்;பதுடன், மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து இம்முறை 263 பேர் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹஜ் பயணிகளை வழியனுப்பும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு -ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில், மௌலவிகே.எல்.ஏ.அமீன் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஹஜ்ஜாஜிகள் மற்றும் உறவினர்களும் நிகழ்வில் பிரசன்னமாயிருந்ததுடன், ஹஜ்ஜாஜிகளுக்கான விமான பயண டிக்கட் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
மௌலவி எல்.எச். அப்துல்லா விசேட பிரார்த்தனை நிகழ்த்தினார்.
பொதுமக்கள் ஹஜ்ஜாஜிகளை வழியனுப்பியதுடன், நூறுல் அமானி பயண நிறுவனத்தின் பணிப்பாளர் ஹசீர் மற்றும் இஸ்லாமிய
மார்க்க அறிஞர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.