மட்டக்களப்பு புளியந்தீவு பொதுசுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
98 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணந்து மட்டக்களப்பு புளியந்தீவு பகுதியில் எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 வைரஸ் மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது ரபிட் அன்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.