தேசிய மீனவ ஒத்துழைப்பு ,யக்கத்தின் ஏற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாரை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட 17 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களும் பணமும் அக்கரைப்பற்று சுவாட் மண்டபத்தில் ,இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வழங்கி வைக்கப்பட்;டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர்,ஸ்ஸடீன் தலைமையில் ,இடம்பெற்ற நிகழ்வில் தேசிய மீனவ ஒத்துழைப்பு ,இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் கிரோஜாதரன் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் றியாஸ் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையராசனின் செயலாளர் கண்ணதாசன் தேசிய மீனவ ஒத்துழைப்புஇயக்கத்தின்; பெண்கள் திட்ட இ,ணைப்பாளர் லாவினா ஹசந்தி அமைப்பின் கள உத்தியோகத்தர் கோகுலன் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ,இர்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி திட்டத்தின் நோக்கம் மற்றும் வழங்கப்படும் வாழ்வாதார உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் தெளிவூட்டினார்.
இதன் பின்னராக தெரிவு செய்யப்பட்ட 17 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தையல் இயந்திரம் மீன்பிடி உபகரணம் கோழிவளர்ப்பு பயிர்ச்செய்கை கால்நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பெரும் அர்ப்பணிப்போடு செயலாற்றிய தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார உள்ளிட்டவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.