பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்! – வடக்கு ஆளுநர்

0
45

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

ஏடு நிறுவனத்தால் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உழரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன.

அவற்றில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் எனவும் பெற்றோர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் பா.ஜெயராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஏடு ஐக்கிய இராச்சிய கிளையின் இணைப்பாளர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.