பேத்தாழை கிராமத்தில் டெங்கு
ஒழிப்புக்கான கள பரிசோதனை

0
173

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பேத்தாழை கிராமத்தில் இன்று டெங்கு ஒழிப்புக்கான கள பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜி.சுகுணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிகப்பு வலயங்களாக பிரகடணப்படுத்தப்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளில் இவ் நடவடிக்கை இன்று தொடக்கம் 5 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீவ் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

பொதுச் சுகாhர பரிசோதகர்கள்,கடல்படையினர், பிரதேச சபை ஊழியர்கள்,மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்புடன் 10 குழுக்களாக இணைந்து மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டெங்கு நுளம்பின் தாக்கம் இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றினை அழிப்பதுடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிராந்திய தொற்று நோயியல் வைத்தியர் வே.குணராஜசேகரம்,மாவட்ட பூச்சியியலாளர் திருமதி தர்சினி குணசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.