பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நேற்று வரை 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும், நேற்று மட்டும் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.நேற்றைய தினம் வரை மாத்தளை தொகுதியில் எந்தவொரு கட்சியும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று ஆரம்பமானதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தொகுதிகளுக்கு ஜனசேத பெரமுன கட்சி நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன் மூன்று சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.