கொழும்பு, பொரளையிலுள்ள தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொழும்பு, தெற்கு பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டிய பனாமுர பிரதேசத்தில் வைத்து செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.