பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காரணம் வௌியானது

0
5

அரசியல் காரணங்களுக்காக எந்த ஒரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாத சூழலில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

சில அதிகாரிகளின் செயல்திறன் குறைபாடே இடமாற்றங்களுக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.’இது சில காலங்களாகவே மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. மூன்று வருடங்களாக இடமாற்றம் செய்யப்படவில்லை. இதில் எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் சில அதிகாரிகளை சாதாரண பணிகளுக்கு நியமித்துள்ளோம். சில அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது.

இந்த இடமாற்றங்களின் செயல்திறனை ஒரு வருடத்திற்கு நாங்கள் கண்காணிப்போம். பொறுப்பதிகாரிகள் அங்கே சும்மா உட்கார முடியாது.வேலை செய்ய வேண்டும். இந்த இடமாற்றங்கள் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவும் எங்களிடம் பலமுறை கேட்டது. ‘இதற்கமைய அவர்களின் ஒப்புதலுடன் இது செய்யப்பட்டது.’ என்றார் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (11) இரவு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆகம்.

இதில் 104 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும்இ 35 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குகின்றனர். இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருந்து அமுலுக்கு வருகிறது. இங்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 51 அதிகாரிகள் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். தலைமையக பொலிஸ் பரிசோதகர்களாக பணியாற்றிய அதிகாரிகளும் சாதாரண பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.