மக்கள் ஆணையில்லாத அரசாங்கமானது இன்று கொள்கைப்பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளது – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

0
106

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வார்த்தைகளால் மக்களை அச்சுறுத்துவதற்கு முயற்சித்தாலும் நாம் அதற்கு அஞ்சப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணையில்லாத அரசாங்கமானது, இன்று கொள்கைப்பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளது.

2026ஆம் ஆண்டே நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களாகின்றன. சர்வதேசத்தின் துணையுடன் ஒருவருடத்தில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.

எனினும் நாட்கள் செல்ல வட்டிவீதம் அதிகரித்து செல்கின்றது. எரிவாயுவின் விலை அதிகரித்து செல்கின்றது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது.

நாட்டு மக்கள் பட்டினியால் வாடும்போது தேசிய சுதந்திர தின நிகழ்வை பாரிய தொகையை செலவு செய்து நடத்த வேண்டியது அவசியமா?

நாடு நெருக்கடிகளுக்குள் இருக்கும்போது நாட்டு மக்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பரா?

சட்டத்துக்கு மக்கள் மதிப்பளிப்பதற்கு முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அரசியலமைப்பை பாதுகாப்பதாகக் கூறி வந்தவர்களே இன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

தேசிய கொள்கை பிரகடன உரையை மொட்டுக்கட்சியினர் மட்டுமே செவிமடுப்பர்.