மக்கள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தவர்களையே இம்முறை, மக்கள் தெரிவு செய்வார்கள்: அங்கஜன்

0
52

கடந்த கால தேர்தல்களில் மக்களது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதிலிருந்து வாக்குகளை பெற்று வென்ற பின்னர் அவற்றைப்பற்றியே சிந்திக்காதவர்களை, மக்கள் இம்முறை நிச்சயம் நிராகரிப்பார்கள், மக்கள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்தவர்களையே இம்முறை மக்கள் தெரிவு செய்வார்கள் என ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை தொகுதி சுழிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.