மட்டக்களப்பில் 74வது சுதந்திர தின நிகழ்வுகள்

0
150

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14பிரதேச செயலகங்களிலும் இன்று காலை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் உட்பட உத்தியோகத்தர்கள்,திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு உதவி பிரதேச செயலாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் சிரமதான பணிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.