மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு வழங்கல்

0
174

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கிகள் ஊடாக ஓய்வூதியம் வழங்கும் பணிகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரச வங்கிகள் ஊடாக அதிகளவானோர் இன்று காலை முதல் தங்களது ஓய்வூதிய கொடுப்பனவுகளைப்பெற்றுவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிப்பட்ட வாகனங்களிலும் வாடகை வாகனங்களிலும் ஓய்வூதியும் பெறுவோர் வங்கிகளுக்கு வருகைதந்து தங்களது கொடுப்பனவுகளை பெறுச்செல்கின்றனர்.

வங்கிகளுக்கு வருகைதரும் ஓய்வூதியக்காரர்களுக்கான உதவிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் வழங்கிவருகின்றனர்.