மட்டக்களப்பில் கைக் குண்டு மீட்பு

0
310

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் தனியார் காணியொன்றில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை பண்படுத்துகையில் பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றிலிருந்து கைக் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்

வெல்லாவெளி காக்காச்சிவட்டை எனும் கிராமத்திலே இக் கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இதனை நீதிமன்ற அனுமதியைப் பெற்று குண்டு அகற்றும் விசேட அதிரடிப்படை மூலம் அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு வெல்லாவெளி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இப்பகுதி முன்னைய காலங்களில் விடுதைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் இச் சம்பவம் தொடர்பில் பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்