மட்டக்களப்பில் தேசிய புகையிலை
தவிர்ப்பு தின நிகழ்வுகள்

0
281

தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

தேசிய புகையிலை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் பகுதியில் புகையிலை தவிர்ப்பு பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் மு.அச்சுதன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள்,வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள 342சுகாதார வைத்திய அதிகாயரிகள் பிரிவுகளிலும் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் வகையில் இன்றைய தினம் புகையிலையற்ற வார நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.